தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்புகளின் சுமை கூடி விட்டதாகவும் உள்நாட்டு பாதுகாப்புக்கான இராஜாங்க அமைச்சு பொறுப்பினை வேறு ஒருவருக்கு மாற்றும் படியும் சமல் ராஜபக்ச, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
20ம் திருத்தச் சட்டத்துக்க ஆதரவளித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சமலின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும், வேலைப்பளுவின் காரணத்தினால் குறித்த அமைச்சுப் பொறுப்பை சரி வர கவனிக்க முடியாதுள்ளதாக சமல் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment