பணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி! - sonakar.com

Post Top Ad

Friday, 27 November 2020

பணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி!

  



கொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக முஸ்லிம் சமூகம் பாரிய வேதனைக்குள்ளாகியுள்ளது.


இந்நிலையில், இன்றும் நேற்றுமாக இதுவரை மூன்று குடும்பங்கள் அவ்வாறு பணம் எதுவும் தர முடியாது, ஜனாஸாவை வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.


கொழும்பு 2 மற்றும் 10ஐச் சேர்ந்த குடும்பங்களே இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதேவேளை இது குறித்து மக்கள் மேலும் விழிப்புடனும் தைரியமாகவும் இருக்க வேண்டும் எனவும், ஜனாஸாக்கள் நிரம்பி வழியும் போது அவர்களாகவே வழிக்கு வருவார்கள் என்றும் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி கருத்து வெளியிட்டுள்ளார்.


பெட்டி வழங்குவது குடும்பத்தினரின் பொறுப்பென அண்மையில் சுகாதார அமைச்சர் தெரிவித்ததையடுத்து இக்கெடுபிடிகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment