கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள போதிலும் கொழும்பில் அதிகரித்துள்ள நிலையில் கொழும்பின் முக்கிய இடங்களைத் தனிமைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில், திங்கள் (16) அதிகாலை 5 மணி முதல் மருதானை, கொம்பனித்தெரு, கோட்டை, டேம் வீதி மற்றும் புறக்கோட்டைப் பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலவே தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment