சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டின் பிரதி சுகாதா அமைச்சர் Dr அப்துல்லா அல் அஸ்ரி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் 70 வீதமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், தடுப்பூசி பாவனை அங்கீகரிக்கப்பட்டதும் அதனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முதன்மை நாடுகளில் ஒன்றாக சவுதி இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இரு தனியார் நிறுவனங்கள் ஏலவே தடுப்பூசியுடன் தயார் நிலையில் இருக்கும் அதேவேளை, தற்சமயம் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பூசியும் 70 வீத பாதுகாப்பைத் தரவல்லது என பரிசோதனைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment