நேற்று புதன் கிழமை இரு ஜனாஸாக்கள் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் மேலும் இரு ஜனாஸாக்களை எரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இரு வருடங்களாக நோய்வாய்ப்பட்டு வீட்டிலிருந்த மட்டக்குளியைச் சேர்ந்த 74 வயது வயோதிபர் மற்றும் கொழும்பு, கொம்பனி வீதியைச் சேர்ந்த 48 வயது ஒருவரதுமாக இரு ஜனாஸாக்களையே எரியூட்ட ஆயத்தங்கள் இடம்பெறுவதாக சோனகர்.கொம்முக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் ஆளுங்கட்சி முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாஸா எரிப்புக்கு முடிவு வந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வந்த நிலையில் ஏலவே இரு ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டுள்ளமையும் இவ்விரண்டும் விரைவில் எரியூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment