73 வருடங்களில், இலங்கை அரசு ஆகக்கூடிய கடனைப் பெற்ற வருடமாக இவ்வருடம் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம், அந்தப் பணத்துக்கு என்ன ஆனது? என்ன நடந்திருக்கிறது? என கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் வரவு-செலவு நிதி ஒதுக்கீடு தொடர்பில் கருத்துரைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், ஒரே வருடத்தில் இவ்வரசாங்கம் பெற்ற கடன் தொகை இன்னும் அதிகரிக்கப் போவது மாத்திரம் உறுதியெனவும் இதனால் நாடு அடகு வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டதோடு, கூட்டாட்சி அரசு மூன்று மாதங்களுக்குள் வரவு-செலவுத் திட்டத்தை முன் வைத்து நாட்டை நிர்வகித்ததாகவும் கோட்டாபே தலைமையில் ஒரு வருடமாகியும் இன்னும் முறையான வரவு செலவுத் திட்டத்தை முன் வைக்கவில்லையெனவும் அவர் தெரிவிக்கிறார்.
அத்துடன், இன்று மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதை சுருக்கமாக 'கோட்டா பெயில்' என விபரிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment