மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு அங்கு போதைப் பொருளே காரணம் என விளக்கமளிக்கிறார் விமல் வீரவன்ச.
சிறைச்சாலை வளாகத்துக்குள் 'சரத்' எனும் புனைப்பெயரில் அறியப்படும் போதை மாத்திரையை சத்துர எனும் போதைப்பொருள் கடத்தல் பேர்வழி விநியோகித்ததாகவும் அதனாலேயே அமைதியின்மை ஏற்பட்டதாகவும் விமல் தெரிவிக்கிறார்.
இதே போதைப்பொருளை வெலிகடை சிறைச்சாலைக்கும் விநியோகிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment