இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்போரின் கட்டாயமாக எரிக்கப்படுவதால் நாட்டின் ஒரு தொகுதி சமூகம் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையிட்டு திருப்தியடைகிறேன் என தெரிவிக்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.
இலங்கையயை விட நிலத்தடி நீர் அதிகமுள்ள பல நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்போரின் உடலங்கள் புதைக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இனவாத அடிப்படையில் இன்னொரு இனக்குழுமத்தின் உரிமைகளை மறுப்பது ஏற்புடையதன்று எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறந்த உடலங்களை எரிக்கும் தீர்மானம் தற்போது பாரிய அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளதுடன் சி.டி.ஜே அமைப்பு - ஞானசார மற்றும் கடும்போக்குவாதிகளின் தலையீடும் அரசாங்கத்தின் நாடகமேயென சிங்கள சமூகத்தில் பெருவாரியாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment