பொரளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மேலும் எட்டு பொலிசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக ஆறு பேருக்கு கொரோனா தொற்றிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. இப்பின்னணியில், பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேலும் எண்மருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பொரளை பொலிஸ் நிலையத்தில் 14 பேருக்கும் மொத்தமாக இதுவரை 135 பொலிசார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment