20ம் திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்ததன் பின்னணியில் தமது கட்சிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ள டயானா கமகே மற்றும் அரவிந்த குமாருக்கு ஆளுங்கட்சி பக்கத்தில் ஆசனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ சபாநாயகரிடம் முன் வைத்த கோரிக்கையையடுத்து அதற்கான ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் தொடர்பிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கட்சித் தலைவர்களிடமே ஒப்படைத்திருப்பதாக சமகி ஜன பல வேகய தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment