கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பியோட முனைந்த 22 வயது நபர் ஒருவரை வைத்தியசாலை காவலாளர்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை 6.30 அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக தப்பிச்சென்றிருந்த பெண்ணொருவரையும் நேற்றைய தினம் பொலிசார் கைது செய்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment