உலகெங்கும் வாழும் உதைபந்தாட்ட விளையாட்டுப் பிரியர்களின் நட்சத்திரமாக விளங்கிய ஆர்ஜன்டினாவின் டியாகோ மரடோனா மாரடைப்பால் தனது 60 வது வயதில் காலமானார்.
1986ல் இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இரண்டு கோல்களைப் போட்டு தமது நாட்டுக்கு வெற்றியைத் தேடித் தந்ததுடன் புகழின் உச்சத்தையடைந்த மரடோனா அண்மைக்காலமாக பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.
சில காலங்கள் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று அவர் உயிர் துறந்துள்ளதாக ஆர்ஜன்டினா உதைபந்தாட்ட சபை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment