மஹர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாட்சியங்களை திரிபு படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஜுலை மாதம் கைது செய்யப்பட்ட ஷானி அபேசேகர கடந்த ஆட்சியில் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான பல்வேறு வழக்குகளின் விசாரணைகளை முன்னெடுத்தவராவார்.
ஆட்சிமாற்றத்தின் பின் இடமாற்றம் செய்யப்பட்டிருந்த அவர், தற்சமயம் விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment