சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்கான ஆயத்தங்களில் எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு பூஜை - வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை தொடர்பிலும் பவித்ரா மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தனது உயிரைப் பலி கொடுத்தால் கொரேனா பரவாது என்றால் கடலில் குதிக்கவும் தயார் என அவர் தெரிவித்திருந்தார்.
பின்னர், தான் கடலில் குதித்தாலும் கொரோனா பரவல் நிற்காது என விளக்கமளிக்கவும் பவித்ரா நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சி முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment