கொழும்பு, தனியார் வைத்தியசாலையொன்றில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்றாளராக அடையாளங்காணப்பட்ட நபரொருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலைக்கு தமது பெயர் விபரங்களை போலியாக வழங்கியுள்ள இந்நபர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஆளடையாளம் தெரியாத நிலையில் தேடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் முகாம்களிலிருந்து தப்பியோடியவர்கள் அகப்பட்டிருந்த சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment