சீனாவினால் வழங்கப்பட்டிருந்த பி.சி.ஆர் இயந்திரம் பழுதடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்ததன் பின்னணியில் அதனை ஆராய சீன நிபுணர்கள் வந்துள்ளனர்.
தமது முதற்கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டுள்ள நிலையில் இயந்திரத்தில் கோளாறு எதுவுமில்லையென கண்டறிந்துள்ளதாகவும், அதனை வைத்துள்ள மேசை நிலையாக இல்லாதமையினாலேயே தவறியக்கம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் விளக்கமளித்துள்ளது சீன தூதரகம்.
இந்நிலையில், நாளை திங்கட் கிழமை இதனை உறுதி செய்து கொள்ளும் நிமித்தம் மேலும் பரிசோதனைகளை நடாத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment