வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இன்று (1) ஐந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
குறித்த சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனையில் மூவரும் பிறைந்துறைச்சேனையில் ஒருவரும் மாவடிச்சேனையில் ஒருவருமாக மொத்தம் ஐந்து புதிய தொற்றாளர்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இதுவரை 36 தொற்றாளர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment