அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் கே. எம். அப்துல் முக்ஸித் அவர்களின் தலைமையில், தெஹிவளை முஹையத்தீன் ஜூம்மா மஸ்ஜித்தில் கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் தலைவர்களுடனான ஒன்று கூடல் இன்று (25.11.2020 புதன்கிழமை) நடைபெற்றது.
இந்த ஒன்றுகூடலில் கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள பகுதியில் வாழும் மக்களின் நிலவரங்கள் அவதானத்தில் கொண்டு வரப்பட்டதுடன், பொதுவாக நாடாளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தின் வழிகாட்டலின் கீழ் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட கிளையும், கொழும்பு மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனமும் இணைந்து இவ்வுதவித் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளன. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் நிவாரணங்களை துரிதமாக பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே இவ்வுதவித் திட்டங்களில் தங்களது பங்களிப்பையும் வழங்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
- ACJU
No comments:
Post a Comment