அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினர் தயக்கத்தைக் கைவிட்டு சமூகத்துக்கான தலைமையைப் பொறுப்பேற்று செயற் பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.
இன்றைய (24) தினம் ஊடகவியலாளர் இர்பான் இக்பாலுடன் இடம்பெற்ற சோனகர்.கொம் நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தற்போதை சூழ்நிலையில் தாம் செய்ய பணிகளிலிலிருந்து ஒதுங்கியிருக்க் கூடாது என வலியுறுத்தினார்.
அத்துடன், கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் திட்டமிடப்பட்டு பழிவாங்கப் படுவதாகவும் அவர் ஆணித்தரமாக தெரிவித்திருந்தார். மேலும், எக்காரணம் கொண்டும் அரசின் திட்டத்துக்கமைவாக முஸ்லிம்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக் கூடாது எனவும் தற்போதைய சூழ்நிலை குறித்தும் வெளியிட்ட கருத்துக்களடங்கிய காணொளியைக் கீழ்க்காணலாம்:
No comments:
Post a Comment