இதுவரை 785 பொலிசார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்தவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை இறுதியாக பேராதெனிய போக்குவரத்து பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளது தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெறுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக கடமையில் இருந்தவர் என்ற ரீதியில் அவர் உபயோகித்த ஏதாவது பொருட்கள் ஊடாக தொற்று ஏற்பட்டதா என்றும் விசாரிக்கப்படுவதாகவும் குறித்த நபருக்கு இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment