பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று தனது 75வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய உங்களை பல தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும் என தயாசிறி ஜயசேகர வாழ்த்தியுள்ள அதேவேளை, சிறந்த முன் மாதிரியாக இருக்கும் அன்புத் தந்தையென நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
1970ம் ஆண்டு தனது தந்தையின் மறைவையடுத்து பெலியத்த தொகுதியில் 24 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான அவர், நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்து தற்போதும் பிரதமராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment