கண்டி மாவட்டத்தில் இதுவரை 45 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன்.
தெல்தொட்ட, ஹாரிஸ்பத்துவ, உடதும்பர, யட்டிநுவர உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தலா ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபா நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment