நேற்றைய தினம் 458 கொரேனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை அதில் பெருமளவானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கொம்பனித்தெரு, கொட்டாஞ்சேனை, மருதானை, கிரான்ட்பாஸ், வெள்ளவத்தை போன்ற பகுதிகள் உள்ளடங்கலாக 259 தொற்றாளர்கள் நேற்று கொழும்பிலிருந்து கண்டறியப்பட்டுள்ளனர்.
இதேவேளை, களுத்துறை, கம்பஹா, கண்டி, நுவரெலிய, காலி, யாழ்ப்பாணம், மாத்தறை, அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலிருந்தும் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment