பாணந்துறை வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்ட ஒருவர் கொரோனா மரணம் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை வாபஸ் பெற்றுள்ளது அரசு.
கொரோனா தொற்று மரணத்திற்குக் காரணமில்லையென்பதால் இவ்வாறு தமது அறிவிப்பை வாபஸ் பெறுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இறந்த பின்னர் சிலர் கொரோனா தொற்றாளர்கள் என அறிவிக்கப்பட்டு உடலங்கள் எரிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 21 ஆக மீள நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment