இலங்கையில் 22வது கொரோனா மரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை, தற்கொலை செய்து கொண்ட மாற்றுத்திறனாளியே இவ்வாறு 22வது மரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரச தகவலின் அடிப்படையில் பாணந்துறை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
விசேட தேவையுடைய குறித்த நபரின் தாயார் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப் பட்டிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment