அனுராதபுரம் மாவட்டத்தில் கொவிட் 19 கொரோனா வைரஸ் 16 பேருக்கு தொற்றியுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட தொற்று நோய்ப்பிரிவு விசேட வைத்திய நிபுணர் தேஜன சோமதிலக்கா தெரிவித்தார்.
இவர்கள் மத்திய நுவகரம்பலாத, கிழக்கு நுவகரம்பலாத, தலாவ, ராஜாங்கன, இபலோகம, ரம்பேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இதில் ஐந்து பேர் மத்திய நுவகரம்பலாத பிரதேச செயலாளர் பிரிவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பிரண்டெக்ஸ் ஆடைத் தொழிற்சாலை, பேலியகொட மீன் சந்தை வியாபார நிலையங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவரோடு தொடர்பை பேணியவர்கள் என கண்டுபிடிக்கப்பட்ட 1700 பேர் பல்வேறு இடங்களில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார வழிமுறைகளை கடைபிடித்து, நோய் எதிர்ப்பு ஆகாரங்களை உட்கொண்டு சமூக இடைவெளியுடன் நடந்து கொண்டால் இந்த நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம் எனவும் அனுராதபுரம் தொற்று நோய் பிரிவு விசேட வைத்திய நிபுணர் தேஜன சோமதிலக்கா தெரிவித்தார்.
-முஹம்மட் ஹாசில்
No comments:
Post a Comment