2017ம் ஆண்டு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் விரோத இனவாத நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக நாட்டில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை நடாத்துவதற்கு கருணா அம்மான் 15 கோடி ரூபா பேரம் பேசியதாக தகவல் வெளியிட்டுள்ளார் பொலிஸ் உளவாளி நாமல் குமார.
அபே ஜன பல கட்சியின் தேசியப்பட்டியலை தமதாக்கிக் கொண்டுள்ள அரம்பேபொல ரதனசார தேரரே கருணா அம்மானுடன் பேரத்தை நடாத்தியதாகவும் போதிய நிதியைத் திரட்டிக் கொள்ள முடியாத நிலையிலேயே அத்திட்டம் முழுமையாக இடம்பெறவில்லையெனவும் நாமல் தெரிவிக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச ஆகியோரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியிட்டு நாமல் குமார பரபரப்பை உருவாக்கியிருந்த அதேவேளை, அதன் தொடர்ச்சியிலேயே 2018 ஒக்டோபரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment