கடந்த மாதமே கண்டறியப்பட்ட மினுவங்கொட - பேலியகொட கொரோனா கொத்தனியூடாக 10,220 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் முதல் இலங்கையில் இதுவரை 13,702 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அதில் 10,220 பேர் அண்மையில் கண்டறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் 5,383 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதே வேளை இதுவரை 34 பேர் உயிரழந்துள்ளதாக அரசு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment