ரிசாத் எங்கிருக்கிறார்? அநுர குமார விளக்கம்! (video) - sonakar.com

Post Top Ad

Saturday, 17 October 2020

ரிசாத் எங்கிருக்கிறார்? அநுர குமார விளக்கம்! (video)

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக தேர்தல் காலத்தில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் தற்போது தேடப்படுவதற்கான கராணமும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை என தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.


ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ரிசாதின் குடும்பம் தொடர்பிருப்பதாக தெரிவித்து மக்களை உசுப்பேற்றி வந்த போதிலும் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்கச் செல்ல பேருந்து வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றமை வேடிக்கையானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், அவரைத் தேடுவதாகக் கூறிக் கொள்வதும் அதை விட வேடிக்கையானது எனவும் அவர் அடிக்கடி சென்று வரக்கூடிய ஆளுங்கட்சி நபர்களின் வீடுகள் சில இருப்பதாகவும் அதில் ஒன்றிலேயே ரிசாத் தங்கியிருப்பதாகவும் அநுர தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment