கிழக்கு மாகாணத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் கவனம் செலுத்தாமை குறித்து ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் தோன்றி விளக்கமளித்துள்ளார் முன்னாள் டி.ஐ.ஜி லததீப்.
போதைப்பொருள் தடுப்பு, பாதாள உலகைக் கட்டுப்படுத்தல், சட்டவிரோத மண் - கல் கடத்தல் போன்றவற்றை முறியடிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து விசேட அதிரடிப்படையினர் செயற்பட வேண்டியிருந்ததனாலேயே ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசேட அதிரடிப்படையினரும் அறிக்கைகள் வழங்கியுள்ள போதிலும் சர்ச்சைக்குரிய காத்தான்குடி விவகாரங்கள் தொடர்பில் போதிய கவனம் செலுத்தப்படவோ, புலனாய்வுத்தகவல்கள் உள்ளடக்கப்படவோ இல்லையென ஆணைக்குழு கேள்வியெழுப்பியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
No comments:
Post a Comment