ரயில் பயணிகளுக்கு இலவச பி.சி.ஆர் பரிசோதனை வழங்கும் நடமாடும் சேவை கொழும்பு , கோட்டை ரயில் நிலையத்தில் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பல இடங்களிலும் புதிய கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளிலிருந்து இலங்கையரை அழைத்து வரும் பணியும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்நாட்டில் சமூக மட்டத்தில் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கையின் அங்கமாக இந்நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment