திருட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதான 21 வயது இளைஞன் ஒருவன், பொலிஸ் பாதுகாப்பில் இருந்த வேளையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் பூகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேலையிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணையின் பின்னணியில் இதுவரை சார்ஜன்ட் ஒருவர் உட்பட எண்மர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைதான நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment