எதிர்க்கட்சியிலிருந் துரத்தப்பட்டுள்ள ஏழு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் டயானா கமகே, அரவிந்த குமார் ஆகியோருக்கு ஆளுங்கட்சி பக்கத்தில் ஆசனம் ஒதுக்குமாறு கோரி சபாநாயகருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து பிரதான ஒருங்கமைப்பாளர் லக்ஷ்மன் கிரியல்லவின் ஒப்பத்துடன் இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நசீர் அஹமத், ஹரீஸ், இஷாக் ரஹ்மான், முஷரப், தௌபீக், பைசால் காசிம் மற்றும் அலிசப்ரி ரஹீம் ஆகியோரே எதிர்க்கட்சியின் கூட்டு முடிவை மீறி இறுதி நேரத்தில் அரசுக்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment