பாணந்துறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு நேற்றிரவு முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்று தாதியொருவரின் புதல்வி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதையடுத்து இம்முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் குறித்த பிரிவில் பணியாற்றிய தாதிகள், மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தோழியொருவர் கம்பஹாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment