ICBT தனியார் கல்வி நிறுவனத்தின் மாணவன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குறித்த நிறுவனம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் ஒக்டோபர் 4ம் திகதிக்குப் பின் தமது கல்வி நிறுவனத்துக்கு வருகை தந்தோர் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்கும் படியும் அரசின் சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடிக்கும் படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மினுவ்கொட பொலிஸ் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரிந்த 55 வயது நபர் ஒருவரும் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்மை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment