கூட்டு ஆதன முதலீட்டு சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காக 25,000 ருபா லஞ்சம் பெற்ற கூட்டு ஆதன முதலீட்டு அதிகார சபையின் (Condominium Management Authority) பிரதி முகாமையாளர் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் பெற முயன்ற நிலையில் அலுவலகத்தில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவிக்கிறது.
குறித்த அதிகார சபை வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment