ஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்தொலைபேசியை வீசியெறிந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசாத் பதியுதீனுக்கு பிணை வழங்குவதை ஆட்சேபித்து, குற்றப்புலனாய்வுப் பிரிவின் சார்பில் நீதிமன்றில் ஆஜராகி கருத்து வெளியிட்டிருந்த நிலையிலேயே பிரதி சட்டமா அதிபர் இவ்வாறு தெரிவித்திருந்ததுடன் கைதின் போது ரிசாத் ஒத்துழைக்கவில்லையெனவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் போன்று நடந்து கொள்ளவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
ரிசாத் பதியுதீனின் தேசிய அடையாள அட்டை, வாகனமொன்றிலிருந்து மீட்கப்பட்டதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment