வா'சேனை நீதிமன்ற வழக்குகள் பிற்போடப்பட்டது - sonakar.com

Post Top Ad

Sunday, 25 October 2020

வா'சேனை நீதிமன்ற வழக்குகள் பிற்போடப்பட்டது



வாழைச்சேனை பொலிஸ் பிரில் கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்க சட்டத்தினை அடுத்து வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்றில் இந்த வாரம் நடைபெற இருந்த அனைத்து வழக்குகளும் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக வாழைச்சேனை மாவட்ட ஃ நிதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பஷீல் தெரியப்படுத்தியுள்ளதாக நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்;.


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தின் காரணமாக வாழைச்சேனை பிரதேசத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவித்துள்ளதையடுத்து இந்த வாரம் இடம்பெற இருந்த வழக்குகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.


இந்தவாரம் நடைபெற இருந்த வழக்குகளின் மாற்றப்பட்ட புதிய திகதிகள் நீதி மன்றத்திற்கு முன்னாள் உள்ள விளம்பரப்பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஃ நீதவான் நீதி மன்ற பதிவாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


- எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment