நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனைக் கைது செய்வதற்கு ஆறு விசேட பொலிஸ் குழுக்களை களமிறக்கி நாடளாவிய ரீதியில் தேடிக் கொண்டிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இதன் பின்னணி பற்றிய முழுமையான விபரமடங்கிய அறிக்கை தருமாறு சட்டமா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் சபாநாயகர் யாப்பா.
தீவிரமாகத் தேடியும் காணவில்லையென தெரிவிக்கப்படும் ரிசாத் பதியுதீன், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்து வாழும் மக்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்ல போக்குவரத்து வசதி செய்து கொடுத்ததன் பின்னணியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 9.5 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment