திவுலபிட்டிய பெண்ணொருவரையடுத்து மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் பெருமளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுவதும், மக்கள் கவனம் அதன் பால் திரும்பும் வகையில் ஊடகங்களின் நிகழ்ச்சி நிரல் அமைந்திருப்பதும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகயவின் கபீர் ஹாஷிம்.
நாட்டில் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை திசை திருப்ப இவ்வாறு ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், நிலைமை உண்மையாக இருந்தால் எதிர்க்கட்சியாகத் தாம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment