கார்டினல் மல்கம் ரஞ்சித்தை விமர்சித்தும் அவர் பற்றி வெளியிடுவதற்குத் தம்மிடம் பல தகவல்கள் இருப்பதாகவும் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் காணொளியொன்றை வெளியிட்டிருந்த 43 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார்டினலை 'அங்கிள்' என விளித்து கருத்து வெளியிட்டிருந்த குறித்த பெண், தற்போது அவர் பௌத்தர்களின் நல்ல பிள்ளையாகி விட்டதாகவும் இன்னும் சில காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் 'சில்' எடுத்து நாடு பௌத்த மயமாகும் போது அதனையும் அவர் அங்கீகரிப்பார் எனவும் கார்டினல் பற்றிய பல தகவல்கள் தம்மிடம் இருப்பது அவருக்கும் தெரியும் எனவும் பல்வேறு விடயங்களைப் பேசியிருந்தார்.
இந்நிலையில், குறித்த பெண்ணின் கருத்து பௌத்த - கிறிஸ்தவ மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment