ஓட்டமாவடி: டெங்கு நோயினால் பெண்ணொருவர் மரணம் - sonakar.com

Post Top Ad

Monday 26 October 2020

ஓட்டமாவடி: டெங்கு நோயினால் பெண்ணொருவர் மரணம்

 



ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு நோயினால் பெண்ணொருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். 


ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயல் வீதி மூன்றாம் குறுக்கில் வசிக்கும் நாற்பத்தி மூன்று வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளார். 


டெங்கு நோய் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதற்கு பிறகு இவ்வாறு சுத்தம் இல்லாமல் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.


ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 211 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், டெங்கு நோயினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.


-எஸ்.எம்.எம்.முர்ஷித் 

No comments:

Post a Comment