கம்பஹா மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கள் காலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, களுத்துறையில் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கம்பஹாவில் இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அதேவேளை கம்பஹா ஊடாக வாகனங்கள் பிரயாணிப்பதற்கான அனுமதியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும் வாகனங்களை கம்பஹா மாவட்டத்தில் எங்கும் நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களுத்துறையில் அகலவத்தை மற்றும் பலிந்தநுவர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment