பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் இயங்கும் முன்னணி ஆடைத்தொழிற்சாலையொன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபர் அண்மையிலேயே மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையிலிருந்து விலகி இங்கு வேலை வாய்ப்பைப் பெற்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சுமார் 960 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடாத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, பூகொடயில் இயங்கி வந்த சவுத் ஏசியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன் தற்சமயம் குறித்த ஆடைத்தொழிற்சாலை தமது அனைத்து நடவடிக்கைகளையும் இடை நிறுத்தி பரிசோதனைகளை மேற்கொள்வதோடு சுகாதார அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாக விளக்கமளித்துள்ளது.
No comments:
Post a Comment