தற்கொலைதாரி சஹ்ரான் படகொன்றில் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரன் ரியாஜ் பதியுதீன் உதவியது தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவு, 2018ம் ஆண்டு அரசின் புலனாய்வுத் தகவல் மீளாய்வுக் கூட்டத்தில் தகவல் வெளியிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க.
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு வீடியோ மூலம் நேற்றைய தினம் ஆஜராகியிருந்த நிலையிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
எனினும், அரசியல்வாதிகள் இராணுவத்துக்கும் பொலிசுக்கும் இடையில் பிளவுகளை உருவாக்கியிருந்ததாகவும் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் பாரிய சிக்கல்கள் இருந்ததுடன் இராணுவத்துக்கு தகவல்களை வழங்குவதில் அரச புலனாய்வுப் பிரிவு தயக்கம் காட்டி வந்ததாகவும் மேலும் தெரிவித்துள்ள அவர், சஹ்ரான் பற்றி தான் யாழ் கட்டளைத் தளபதியாக இருக்கும் போதே அறிந்து கொண்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, போதிய சாட்சியங்கள் இல்லாததன் பின்னணியில் ரியாஜ் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அண்மையில் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
Sahran already died so how he can help to escape to india?
Post a Comment