நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பெறுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார் சட்டமா அதிபர்.
2019 ஜனாதிபதி தேர்தலின் போது சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்தது மற்றும் பொது மக்கள் பணத்தை விரயப்படுத்திய குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடம்பெயர்ந்து வாழும் மன்னார் மாவட்ட மக்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை தொடர்பிலேயே இக்குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment