லஞ்ச ஊழல் வழக்குகளிலிருந்து ஜோன்ஸ்டன் விடுவிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 2 October 2020

லஞ்ச ஊழல் வழக்குகளிலிருந்து ஜோன்ஸ்டன் விடுவிப்பு



கடந்த ஆட்சியில் தற்போதைய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தொடுக்கப்பட்டிருந்த வழக்குகளிலிருந்து அவரை விடுவித்துள்ளது நீதிமன்றம்.


2010 முதல் 2014 வரையான காலப்பகுதியில் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது, தொழிலாளர்களை அரசியல் தேவைக்காக பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் ஜோன்ஸ்டனுக்கு எதிராக முன் வைக்கப்பட்டிருந்தது.


எனினும், குறித்த வழக்குகளைத் தொடரும் பின்னணியும் அதிகாரதும் குறித்த ஆணைக்குழுவுக்கு இல்லையெனும் பிரதிவாதியின் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment