உத்தேச 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் பிரதமருக்கு விமல் வீரவன்ச எழுதிய கடிதத்தினை உள்ளக ரீதியாகப் பேசி முடிவெடுக்காது ஊடகங்களில் வெளியிட்டது அநாகரீகமான செயல் என விசனம் வெளியிட்டுள்ளார் பெரமுன செயலாளர் சாகர காரியவசம்.
குறித்த விவகாரத்தை பெரிதாக்காது அதனை கட்சிக்குள் தொடர்பு கொண்டு தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தினை அவர் பகிரங்கப்படுத்தியிருக்கக் கூடாது எனவும் காரியவசம் தெரிவிக்கிறார்.
மஹிந்த ராஜபக்சவுடன் ஒட்டுறவாடுவதன் ஊடாக விமல் வீரவன்சவின் கட்சி அண்மைய தேர்தல்களில் நல்ல அடைவைக் கண்டு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment