பசில் ராஜபக்சவின் மீதான அதீத காதலிலேயே தாம் 20ம் திருத்தச் சட்டத்தின் ஒரு பகுதியை ஆதரித்ததாக பொத்துவில் நாடாளுமன்ற உறுப்பினர் முஷரப் 'தொழிநுட்ப' விளக்கங்கள் அளித்து வரும் நிலையில் தான் தனது ஊர் மக்களின் அபிலாசைகளை மதித்து, ஜம்மியத்துல் உலமாவின் ஆலோசனைப்படியே 20ம் திருத்தச் சட்டத்தை ஆதரித்ததாக தெரிவித்துள்ளார் தராசு சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அலி சப்ரி ரஹீம்.
வாக்கெடுப்பு தினத்தில் 20ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக ஆதரித்திருந்த அவர் தான் வேறு எந்தக் கட்சிக்கும் தலைமைக்கும் கட்டுப்பட வேண்டியதில்லையெனவும் விளக்கமளித்திருந்தார்.
எனினும், புத்தளம் ஜம்மியத்துல்லா உலமாவிடம் அவ்வாறு 20ம் திருத்தச் சட்டம் குறித்து பிரத்யேக ஆலோசனை எதுவும் பெறப்படவோ இது குறித்து கலந்துரையாடப்படவோ இல்லையனெ புத்தளம் மாவட்ட ஜம்மியா தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒலிப்பதிவினை செவிமடுக்க:
No comments:
Post a Comment