1978ம் ஆண்டின் பின்னர் முதற்தடவையாக உச்ச நீதிமன்றின் நீதிபதிகள் எண்ணிக்கை 11 இலிருந்து 18 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 12 இலிருந்து 20 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் நீதி வழங்குவதில் 'தாமதம்' இருக்க முடியாது என தெரிவித்துள்ளார் நீதியமைச்சர் அலி சப்ரி.
நேற்றைய தினம் 20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இனியும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளைத் தாமதிக்க முடியாது எனவும் நாட்டின் முன்னேற்றத்தை துரிதகமாகக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
20ம் திருத்தச் சட்டத்திருத்தம் கேள்விக்குள்ளாகியிருந்த போதிலும் அரச தரப்பு 'எதிர்க்கட்சி' உறுப்பினர்களையும் சுவீகரித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment